top of page

’சாவீ ’ - விமர்சனம்

  • mediatalks001
  • Dec 7, 2025
  • 1 min read


சாவு வீடு என்ற இப் படத்தின் தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள்.


மாமன் மகளான கவிதா சுரேஷை காதலிக்கும் நாயகன் உதய தீபா தனது தந்தையை கொலை செய்ததாக நினைத்து  தன் இரண்டு மாமன்கள் மீது கோபமாக இருக்கிறார். 


உதய தீபா செய்த பிரச்சனையால் அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார் மாமா.  


இந்நேரத்தில் பெண் கொடுக்க மறுத்த நிலையில் திடீரென மரணமடைகிறார்.


துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை காவல்துறை அதிகாரியான ஆதேஷ் பாலா கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.


குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார்.


இந்த தொடர் மரணங்களின் பின்னணி என்ன ? காணாமல் போன பிணம் கிடைத்ததா ?இல்லையா ? என்பதை காமெடியாக சொல்லும் படம்தான்  ‘சாவீ’'


நாயகனாக நடித்திருக்கும் உதய தீப் கதைகேற்றபடி மிக சிறப்பாக நடித்துள்ளார்


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா ,யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

 

இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்  

 

சாவு வீட்டில் பிணம் காணாமல் போனதை கதையாக வைத்து காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார்  ஆண்டனி அஜித்,  


ரேட்டிங் - 3 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page