MediaTalks Logo
Header Advertisement
reviews
25 January 2026 at 20:29•1 Views

‘வங்காள விரிகுடா’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘வங்காள விரிகுடா’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

குகன் சக்கரவர்த்தி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், குகன் சக்கரவர்த்தி, அலினா ஷேக், டிப் லேனா ,வையாபுரி, பொன்னம்பலம் , வாசு விக்ரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வங்காள விரிகுடா’.

தூத்துக்குடியில்  மக்கள் சொல்வாக்கு மிக்க தொழிலதிபராக   நாயகன் குகன் சக்கரவர்த்தி இருக்கிறார்.

இந்நிலையில் குகன் சக்கரவர்த்தி நண்பர் வாசு விக்ரமின் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் ஏற்படும் காதலில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் மனம் உடைந்து கடற்கரையில் சோர்ந்து உட்கார்ந்து இருக்கும் சமயத்தில் அவருடைய முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து அவரை காப்பாற்றுகிறார்.

தன்னைப் போலயே தனது காதலியும் வாழ்வில் தோல்வியடைந்தது அறிந்து மிகவும் வருந்துகிறார்.  இதே சமயம்  தான் காதலித்த பெண்ணுக்கு அவரது கணவனால் தொல்லை ஏற்பட குகன் சக்ரவர்த்தி தன் ஆட்களை வைத்து அவரை கொலை செய்து தன் காதலிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்.

இதனையடுத்து குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர், அவரது காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்.  இறந்தவர் எப்படி பேச முடியும் என்பதை அறிந்து கொள்ள நாயகன் குகன் சக்கரவர்த்தி அந்த  நபர் யார்?  என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? அந்த மர்ம நபரை நாயகன் குகன் சக்கரவர்த்தி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான்  ‘வங்காள விரிகுடா’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி தப்பு செய்பவர்களை கேட்கும் அதிரடி குணம் , மனைவி மீதான காதல், காதலி மீது காட்டும் அக்கறை, ஏழை மக்களுக்கு உதவும் பண்பு என அனைத்திலும்  சிறப்பான நடிப்பில் தன் திறமையை நிரூபித்துகாட்டியிருக்கிறார்.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக நாயகனின் மனைவியாக டிப்லேனாவும் காதலியாக அலினா ஷேக்கும் நடித்துள்ளனர்.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்ற வேடங்ககளில் நடித்த அனைவருக்கும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தைத் தனது தோளில் சுமந்து இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி  தனது முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது.

காதலுடன் ஆக்க்ஷன் கதையாக தொடங்கும் படம் பிறகு சஸ்பென்ஸ் திரில்லராக  மாறி பின் அரசியல் படமாக மாறும்போது   திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும் ரசிகர்களிடம் குழப்பத்தை உண்டாக்குகிறது.

ரேட்டிங்- 2.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: