MediaTalks Logo
Header Advertisement
reviews
31 January 2026 at 22:14•1 Views

“லாக் டவுன்” - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
“லாக் டவுன்” - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் ஏஆர் ஜீவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் “லாக் டவுன்”

அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன்  ஆகியோர் நடித்துள்ளனர்.

பட்டப்படிப்பை முடித்த நாயகி  அனுபமா பரமேஸ்வரன்  ஐடி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் வேலை வாங்கி தருவதாக கூறிய தோழியை சந்திக்க செல்லும்போது  அங்கு நடைபெறும் மது  விருந்தில் நன்றாக குடித்து விட்டு ஆட்டம் , பாட்டு என்று சந்தோஷத்தில் போதை அதிகமாகி மயங்கி விடுகிறார்.

போதை தெளிந்ததும் மறுநாள்  காலையில் வீட்டிற்கு செல்லும்  அனுபமா பரமேஸ்வரன்  சில நாட்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது தெரிய வர அதிர்ச்சி அடைகிறார்.இதனால் மனமுடைந்த  அவர் தன் குடும்பத்திற்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க நினைக்கிறார்.

இச் சுழலில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இறுதியில்  பல போராட்டங்களை சந்திக்கும்அனுபமா பரமேஸ்வரன்  தன் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை  கண்டுப்பிடித்தாரா ?  கருவை கலைத்து விட்டாரா ? அவரது குடும்பத்திற்கு  கர்ப்பமான விஷயம் தெரிந்ததா? என்பதுதான்  “லாக் டவுன்” படத்தின் மீதிக்கதை

கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இப்படி ஒரு  கதாபாத்திரத்தில் துணிச்சலான நடித்திருப்பதோடு அழுத்தமான தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.

நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சார்லி அவரது மனைவியாக வரும் நிரோஷா , பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர்கள் : என் ஆர் ரகுநாதன், சித்தார்த்தன் விபின் இசையும், கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவும் கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு   காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்களை வைத்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்  எதிர்கொள்ளும் போராட்டங்களை அழுத்தமாக பதிவு செய்து எதிர்பாராத திருப்பங்களுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா.

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: