'வித் லவ்’ (With Love) - விமர்சனம்
- mediatalks001
- 17 hours ago
- 1 min read

Zion Films சார்பில் MRP Entertainment இணைந்து வழங்க சௌந்தர்யா ரஜினிகாந்த் – மகேஷ்ராஜ் பசிலியான் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'வித் லவ்’ (With Love) .
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணா ,சித்தார்த், சச்சின் நாச்சியப்பன் , சாச்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையில் பணிபுரியும் நாயகன் அபிஷன் ஜீவிந்திற்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அக்கா ஆர்.ஜே.ஆனந்தி பெண் பார்க்கிறார். அபிஷன் ஜீவந்திடம் பெண்ணைப் பற்றி எதுவும் சொல்லாமல் பெண்ணை சந்திக்குமாறு சொல்கிறார்.
அவர் சொன்னபடி அனஸ்வரா ராஜனை அபிஷன் ஜீவிந்த் சந்திக்கிறார். தன்னை பற்றிய விவரங்களை அனஸ்வரா ராஜனிடம் பேசும்போது ஒரே பள்ளியில் இருவரும் படித்தவர்கள் என அபிஷன் ஜீவந்திற்கு தெரிகிறது .
இந்நிலையில் அபிஷன் ஜீவிந்தும் ,அனஸ்வரா ராஜனும் தங்களது முதல் பள்ளிப்பருவ காதலின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இச் சுழலில் அபிஷன் ஜீவிந்திடம் அனஸ்வரா ராஜன் சொல்லும் யோசனையால் இருவரும் தங்களுடைய முதல் காதலை தேடி பயணப்படும்போது அனஸ் வரா ராஜன் மீது காதல் கொள்கிறார் அபிஷன் ஜீவிந்த்.
இறுதியில் தங்களது முதல் பள்ளிப்பருவ காதலை தேடி செல்லும் அபிஷன் ஜீவிந்தும் ,அனஸ்வரா ராஜனும் திருமண வாழ்க்கையில் இணைந்தார்களா? இல்லையா ?என்பதை சொல்லும் படம்தான் ‘வித் லவ்’
சத்யா கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த் இரண்டு விதமான தோற்றத்தில் பள்ளிப் பருத்திலும் , வாலிப வயதிலும் ரசிக்க வைக்கும் நடிப்பில் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மோனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகான அனஸ்வரா ராஜன் உணர்ச்சிமயமான காட்சிகளிலும், காதல்,நடனம் என அனைத்திலும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சிறப்பாக நடித்துள்ளார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் சசிகுமார்,நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் “கலைமாமணி” சரவணன்,, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ,ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், டிம்பிள் கண்ணா, சாச்சனா என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையும் , ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
முதல் பள்ளி பருவ காதலை மீண்டும் தேடி செல்வதை மையமாக கொண்ட கதையுடன் இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இயல்பான காதல் கதையாக பாராட்டும்படி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் இயக்குநர் மதன்.
ரேட்டிங் - 4 / 5








Comments