MediaTalks Logo
Header Advertisement
reviews
8 February 2026 at 13:57•1 Views

‘ரெட் லேபிள்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘ரெட் லேபிள்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரிப்பில் கே.ஆர். வினோத் இயக்கியிருக்கும் படம் ‘ரெட் லேபிள்’

லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வி உதயகுமாரின் மகனான பாண்டியன் அடிதடியிலும் , அராஜகத்திலும் எந்த ஆசிரியரையும் மதிக்காமல் இருக்கிறார். அதே கல்லூரியில் பாண்டியனின் சகோதரி அஸ்மினும் படிக்கிறார். இந் நேரத்தில் கல்லூரியில் மாணவர்கள் தலைவர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாண்டியன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ரோஹித் என்ற மாணவன் போட்டியிடுகிறார்.

பாண்டியனின் அட்டுழியத்தை தாங்க முடியாத ஆசிரியர்கள் ரோஹித் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கல்லூரி காலத்தில் அடிதடி போலீசில் வழக்கு என இருந்து, கல்லூரி படிப்பு முடிந்த பிறகு எல்லாவற்றையும் விட்டு வாழ்ந்து வரும் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் நாயகன் லெனிடம் உதவி கேட்கிறார்கள்.

இச் சுழலில் பாண்டியனின் சகோதரியான தன் காதலி அஸ்மினின் வேண்டுகோளை ஏற்று ரோஹித்திற்கு உதவி செய்ய  லெனின் கல்லூரிக்கு வருகிறார்

இந்நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் ஆர்.வி.உதயகுமாருக்கு தெரிய வர, அவரது மாமனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் .

ஒரு கட்டத்தில் அஸ்மினுக்கும் அவரது மாமனுக்கும் திருமண நிச்சயம் நடக்கிறது.

அதன் பின் கல்லூரியில் மாணவர்களின் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் போட்டியிடும் ரோஹித்திற்கு உதவி புரிவதற்காக கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் என்பதால் கல்லூரிக்குள் மீண்டும் வரும் நாயகன் லெனினுக்கு தன் காதலியின் மாமாவை கொலை செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அந்த கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக அஸ்மின் மற்றும் நண்பர்களுடனும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்.

இந்த சமயத்தில்வேறு யாரையோ கொலை செய்த குற்றத்திற்காக கொலையான நபரை தேடி கல்லூரிக்குள் போலீஸ் வருகிறது.

இறுதியில் நாயகன் லெனின் கொலை வழக்கில் இருந்து போலீசிடம் தப்பித்தாரா ? மாணவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா? காதலியான நாயகி அஸ்மினை திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா? என்பதே ‘ரெட் லேபிள்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின் இயல்பான நடிப்பில் காதல், நட்பு , ஆக்ஷன் என அனைத்திலும் அறிமுக நாயகன் போல இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் அஸ்மின் கல்லூரி மாணவியாக எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனை உருகி உருகி காதலிப்பது, நாயகனுக்காக இறுதிக்காட்சியில் இவர் எடுக்கும் முடிவு அனைத்திலும் நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வித்தியாசமான வில்லனாக நடிக்கிறார்.

முனீஷ்காந்த், அனுமோகன், கல்லூரி ஆசிரியர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கைலாஷ் மேனின் இசையும். சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

மாணவர் தேர்தல் , கல்லூரி வாழ்க்கை , காதல் ஆகியவற்றை மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கே.ஆர்.வினோத்.

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: