MediaTalks Logo
Header Advertisement
reviews
13 February 2026 at 23:21•1 Views

‘பூக்கி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘பூக்கி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும்  ’பூக்கி’

அஜய் திஷன், தனுஷா, பாண்டியராஜன் , சுனில், லட்சுமி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் , பிக்பாஸ் சத்யா ,எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்காஆகியோர் நடித்துள்ளனர்

காதலர்களான நாயகன் அஜய் தினும், நாயகி ஆர்.கே.தனுஷாவும் இரவு நேரத்தில் காரில் செல்லும்போது இவர்களுக்கு பின்னால் காரை ஒட்டி வரும் நபர் அஜய் திஷனின் கார் கண்ணாடியை உடைத்து விட கோபத்தில் அவரை விரட்டி செல்லும் அஜய் திஷன் அந்த நபருடன் நடுரோட்டில் சண்டை போட இதை தடுக்க நினைக்கும் நாயகி தனுஷா அஜய் திஷனை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அஜய் திஷனும் தனுஷாவின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்

இந்நிலையில் இவர்களது வீடியோ சமூக ஊடகங்ககளில் பரவுகிறது.

இப் பிரச்சனையினால் காதலர்களான இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

இருவரும் பிரிந்துவிட்டாலும் பழைய நினைவுகளால் தங்களுடைய பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

பழைய காதலை மறப்பதற்காக அஜய் திஷன் – தனுஷா இருவரும் புதிய காதலை நோக்கி செல்கின்றனர் .

இறுதியில் புதிய காதலை தேடி சென்ற அஜய் திஷனும் – தனுஷாவும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? என்பதே ‘பூக்கி’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன் கதாபாத்திரத்துடன் இணைந்து காதல், பாசம், பிரிவு , கோபம், என அனைத்து காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா அழுத்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாக வாழ்கிறார்..

அப்பாவாக வரும் பாண்டியராஜன், சுனில், மன நல மருத்துவராக நடித்திருக்கும் லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கின்றனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

காதலர்களின் பிரிவை மையமாக கொண்ட கதையுடன் மனதார காதலித்தவர்கள் தங்கள் காதல் தோல்வியடையும்போது ஏற்படும் காதல் பிரிவின் வலியை உணர்வு பூர்வமாக சொல்வதுடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் ஒரு அழகான காதல் படமாக ஒளிப்பதிவுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கணேஷ் சந்திரா

மொத்தத்தில் ’பூக்கி’ – உணர்வுப்பூர்வ காதல்

ரேட்டிங் - 3.2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: