‘கப்புள் ஃபிரண்ட்லி ‘ - விமர்சனம்
- mediatalks001
- 8 hours ago
- 1 min read

யூவி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் அஜய் குமார் ராஜு தயாரிப்பில் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் ‘கப்புள் ஃபிரண்ட்லி ‘
சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு ,லிவிங்ஸ்டன் , ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.
திருச்சியில் வாழ்ந்து வரும் நாயகன் சந்தோஷ் ஷோபன் இன்டீரியர் டெகரேஷன் படிப்பை படித்துவிட்டு அதற்கான வேலையை தேடுவதற்காக சென்னைக்கு வருகிறார்.
இச் சூழ்நிலையில் சென்னையில் ஐடி துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் நாயகி மானசா வாரணாசியை சந்தோஷ் ஷோபன் சந்திக்க அவருக்காக தங்கும் விடுதி தேடி அலைகிறார். தங்கும் விடுதியில் இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் தான் தங்கியிருக்கும் வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
நாயகி மானசா வாரணாசி உதவியுடன் சந்தோஷ் ஷோபன் இன்டீரியர் டிசைனிங் துறையில் எதிர்பார்த்த வேலைகள் கிடைப்பதால் நல்ல நிலைக்கு வருகிறார்
ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாக லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்கிறார்கள். இந்நிலையில் மானசா வாரணாசியின் அப்பா மானசாவின் காதலை ஏற்க மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் மானசா வாரணாசிக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பினால் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய சோகம் ஏற்படுகிறது.
அதன் பின் என்ன நடந்தது ? மானசா வாரணாசியின் அப்பா மானசாவின் காதலை ஏற்றுக் கொண்டாரா ? இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா? என்பதுதான் ‘கப்புள் ஃபிரண்ட்லி ‘ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சந்தோஷ் சோபன் காதல் ,காதலியுடன் ரொமான்ஸ் , பாசம் ,தவிப்பு என அனைத்திலும் உணர்வுபூர்வமாக சிறப்பான வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசி இயல்பான நடிப்பில் அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் .
யோகி பாபு, சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன் , ஸ்ரீ ரஞ்சனி என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது .
இன்றைய காதலர்களின் காதலையும் ,அந்த காதலின் புரிதலையும் மையமாக கொண்ட கதையுடன் யாரும் யூகிக்க முடியாத வகையில் எதிர்பாராத திருப்பத்துடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் உணர்வுபூர்வமான காதல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர்.
ரேட்டிங்- 3.5 / 5








Comments