MediaTalks Logo
Header Advertisement
reviews
7 March 2026 at 15:31•1 Views

‘முஸ்தபா முஸ்தபா’ – விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘முஸ்தபா முஸ்தபா’ – விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

தி மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் ‘முஸ்தபா முஸ்தபா’ .

சதீஷ் , சுரேஷ் ரவி, மோனிகா சின்னகொட்லா, மானசா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர் .

நாயகன் சதீஷும், சுரேஷ் ரவியும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் .

இந்நிலையில் டாக்டரான நாயகி மோனிகா சின்னகொட்லா அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காக சதீஷ் பணிபுரியும் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வருகிறார். மோனிகா சின்னகொட்லாவை பார்த்ததும் சதீஷ் காதல் கொள்ள பெரியவர்கள் சம்மதத்துடன் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்

இச் சூழ்நிலையில் திருமணம் நடைபெற சில நாட்கள் உள்ள நிலையில், சதீஷ் ஐஸ்வர்யா தத்தாவுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது.

நண்பன் சுரேஷ் ரவி மூலம் இணையதளத்தில் வெளியான வீடியோவை பற்றி தெரிந்து கொள்ளும் சதீஷ் காதலியான மோனிகா சின்னகொட்லாவுக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை

அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார் .

வீடியோ பதிவை அழிக்க அதில் வல்லவரான நண்பன் கருணாகரனை  சதீஷும், சுரேஷ் ரவியும் சந்திக்கின்றனர்.

இறுதியில் கருணாகரன் இணையதளத்தில் வெளியான சதிஷின் வீடியோ பதிவை அழித்தாரா? வீடியோவை பதிவேற்றிய மர்ம நபர் யார் ? சதிஷுக்கும் – மோனிகா சின்னகொட்லாவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா என்பதை சொல்லும் படம்தான் ‘முஸ்தபா முஸ்தபா’.

நாயகனாக நடித்திருக்கும் சதிஷ் தனக்கு ஏற்படும் போராட்டமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் காமெடி கலந்த கதாபாத்திரமாக உணர்வுபூர்வமான நடிப்பில் மிக சிறப்பாக நடிக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லா இயல்பான நடிப்பில் கதைகேற்றபடி நடிக்கிறார் .

நாயகனுக்கு இணையாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி காமெடி காட்சிகளில் நடிப்பில் தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.

சுரேஷ் ரவி காதலியாக நடித்திருக்கும் மானசாவிற்கு படத்தில் நடிப்பதற்கு காட்சிகள் குறைவாக உள்ளது.

சதிஷ் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன் ,ஜாவா சுந்தரேசன் , பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, சாணக்யன் ,லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது.. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு காட்சிகளில் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இயல்பான காதல் கதையுடன் நாயகன் தனக்கு ஏற்படும் பிரச்சனையை நண்பர்களின் முலம் எப்படி சரி செய்கிறார் என்பதை விறு விறுப்பான நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி கலகலப்பான படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் சரவணன் .

மொத்தத்தில் ‘முஸ்தபா முஸ்தபா’ – காமெடி கலாட்டா

ரேட்டிங் - 3 /5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: