MediaTalks Logo
Header Advertisement
reviews
7 March 2026 at 16:24•1 Views

‘அனோமி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘அனோமி’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

குமார்  மங்கட் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ், பாவனா – ஆதித் பிரசனாகுமார் தயாரிப்பில் இயக்குநர் ரியாஸ்  மராத் இயக்கத்தில்  ‘அனோமி’.

பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா ஆகியோர்  நடித்துள்ளனர் .

தடவியல் நிபுணரான நாயகி பாவனா, ஒரு சாலை விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார்.இதனால் பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்படுவதால் அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதுடன் தம்பி மேல் அதிக பாசத்துடன் அவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மன ரீதியாக பாதிப்படைந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த வழக்கை காவல்துறை அதிகாரி ரஹ்மான் விசாரணை மேற்கொள்கிறார்

இந்த தற்கொலை வழக்கை விசாரிப்பதற்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும் பாவனா தம்பி ஷெபின் பென்சனை காணாமல் அதிர்ச்சி ஆகிறார். பதட்டத்துடன் பல இடங்களில் தேடி ஷெபின் பென்சன் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கிறார் .

ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ரஹ்மான் ஷெபின் பென்சனை பிணமாக கண்டெடுக்கிறார்

தற்கொலை என முடிவான இரண்டு உடல்களின் பிரேத பரிசோதனையில் இது தற்கொலை இல்லை கொலை என்பதை கண்டுபிடிக்கிறார்பாவனா . இதே சமயம் இளம் பெண் ஒருவர் இதே பாணியில் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து ரஹ்மான் இந்த வழக்கை விசாரிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரி ஒரு பக்கம் ரஹ்மான்தீவிரமாக இருக்க , மறு பக்கம் தனது தம்பி ஷெபின் பென்சனை கொன்ற கொலையாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் பாவனா.

இறுதியில் பாவனாவும் – ரஹ்மானும் உண்மையான கொலை குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? யார் அந்த கொலையாளி ? கொலைக்கான காரணம் என்ன ? என்பதுதான் ‘அனோமி’ படத்தின் மீதிக்கதை.

தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா தம்பி மேல் பாசம் கொண்ட அக்காவாக இயல்பான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். கோபம், துணிச்சல், எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஹ்மான் கொலைகாரனை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் அனுபவ நடிப்பில் பாராட்டும் வகையில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் ஷெபின் பென்சன், காதலனாக நடித்திருக்கும் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் அருமை . பின்னணி இசை கதையின் வேகத்திற்கு இணையாக உள்ளது ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இயல்பான கதையாக அக்கா – தம்பி பாசத்தை மைய கருவாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சிகளும் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக திரைப்படத்தை பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் ரியாஸ் மராத்

மொத்தத்தில் ‘அனோமி ’ – கிரைம் திரில்லர்

ரேட்டிங் : 4.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: