MediaTalks Logo
Header Advertisement
reviews
27 December 2024 at 11:56•1 Views

’அலங்கு’ - விமர்சனம் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’அலங்கு’ - விமர்சனம் !
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

கேரள எல்லை பகுதியான ஆனைக்கட்டி வன துறைக்கு கட்டுப்பட்ட மலை பகுதியில்  கதையின் நாயகன்  குணாநிதி தங்கையுடன் கணவனை இழந்த தாய் ஸ்ரீரேகா ,காளி வெங்கட் உட்பட சில குடும்பகளுடன் வசித்து வருகிறார் .

தாய் ஸ்ரீரேகா விவசாய வேலை பார்த்து வட்டிக்கு பணம்  வாங்கி குணாநிதியை டிப்ளமோ படிக்க வைக்கிறார்.

இந்நேரத்தில் கோழி கழிவுகளை தின்று நோய் வாய்பட்டு சோற்றில் விஷம்  வைத்து  உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நாயை காப்பாற்றி குணாநிதி வளர்த்து வருகிறார்

இதனையடுத்து  குணாநிதி படிக்கும் கல்லூரியில் சிறிய பிரச்சனைக்காக  ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

இந்நிலையில் வட்டிக்கு கடன் கொடுத்தவர் பணம் கேட்டு தாய் ரேகாவை மிரட்ட, காளி வெங்கட்டின் உதவியுடன் கேரள மாநிலமான அகழியில்   ரப்பர் தோட்டத்திற்கு நண்பர்களுடன் நாயையும் கூட்டி சென்று வேலைக்குச் செல்கிறார் .

கேரளாவில் ரப்பர் தோட்ட முதலாளியான செம்பன் வினோத் அப்பகுதியின் நகராட்சி தலைவராக இருக்கிறார்.திருமணமாகி பல வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தை இவருக்கு பிறக்கிறது.

பள்ளி பருவ சிறுமியான தன் மகள்தான் தனக்கு எல்லாமே என பாசமாக  வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள்  செம்பன் வினோத்தின் மகள்  பிறந்தநாள் கொண்டாடி கொண்டு இருக்கும் போது அப்பகுதியில் இருக்கும்  நாய் ஒன்று குழந்தையை கடித்து விட, இதனால் கோபம் கொண்ட செம்பன் வினோத் தனது அடியாட்களின் தலைவனான சரத் அப்பானியிடம் ஏரியாவில் இருக்கும் அனைத்து நாய்களையும் வெட்டி கொன்று விடுமாறு கூறி விடுகிறார்.

செம்பன் வினோத் சொன்னபடி ஒரு நாயை கொன்றால் ரூபாய் இரண்டாயிரம் என்கிற கணக்கில் அவரது ஆட்கள் பல நாய்களை கொன்று குவிகிறார்கள்.

இதே நேரத்தில்  குணாநிதி நாயையும் பிடித்துச் செல்கின்றனர்.

நாயை தேடி செல்லும் குணாநிதி அப்போது நடக்கும் சண்டையில், செம்பன் வினோத்தின் வலது கையாக இருந்த சரத் அப்பானியின் கையை தெரியாமல் வெட்டி விடுகிறார் .

இதனால் ஆத்திரமடைந்த   செம்பன் வினோத் சரத் அப்பானியின் கையை  வெட்டிய  குணாநிதியை அவனது நண்பர்களையும் வெட்டி வீழ்த்த தன் அடியாட்களை ஏவுகிறார் .

முடிவில்  செம்பன் வினோத் சரத் அப்பானியின் அடியாட்கள் நாயகன் குணாநிதியை கண்டுபிடித்தார்களா?

தனது  நாய்க்காக ஏற்பட்ட பிரச்சனையில் குணாநிதி தன் நாயை காப்பாற்றினாரா?  இல்லையா?என்பதை சொல்லும் படம்தான்  ’அலங்கு’

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும்  குணாநிதி இயல்பான நடிப்பில் தாய் தங்கை உறவுகளுடன் பழகும் காட்சிகளிலும் , நண்பர்களிடம் நடந்து கொள்ளும் முறை , மனித நேயத்துடன்  நாய் மீது கொள்ளும் பாசம் என் அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

குணாநிதியின் தாயாக  நடித்திருக்கும்  ஸ்ரீரேகா சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பில் கவனம் பெறுகிறார் .

மலையாள உலகில் பிரபல நடிகராக வரும்  செம்பன் வினோத், சரத் அப்பாணி,, மாமாவாக நடித்த காளி வெங்கட்  , நண்பர்களாக நடித்த நடிகர்கள்  மற்றும் நாய் என  படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற படி சிறப்பாக நடித்துள்ளனர் .

மலை வாழ் மக்களின் இயல்பான வாழ்வியலுடன் அனைத்து உயிர்களும் இவ் உலகில் ஒன்றுதான் என்கிற அழுத்தமான கருத்துடன் தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன்  இயல்பான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  எஸ் பி சக்திவேல்

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: