MediaTalks Logo
Header Advertisement
reviews
22 February 2025 at 23:36•1 Views

‘ராமம் ராகவம்’  - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ராமம் ராகவம்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

சார்பதிவாளரான சமுத்திரக்கனி நேர்மையான அதிகாரியாக கடலூர் மாவட்டத்தில் வேலை செய்கிறார்

இவரது  மகனான தன்ராஜ் கொரனானி பள்ளியில் படிக்கும்போதே மது , சூதாட்டம் மற்றும் புகை பிடிக்கும்  பழக்கம் என இருக்கும் அத்தனை கெட்ட பழக்கங்களுடன் வாழும் நிலையில் ,,,,

மகன் மீது பாசமான அன்பு கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, என்றாவது ஒரு நாள் அவன் திருந்திவிடுவான் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்.

அதைப் புரிந்து கொள்ளாத மகன் தன்ராஜ் கொரனானி தந்தையை எப்போதும் எதிரியாகவே பார்க்கிறார் .

சமுத்திரக்கனி தன் மகனை எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நிலையில் சமுத்திரக்கனியிடம் சொந்தமாக புதிய தொழில் தொடங்குவதாக ரூபாய் ஐந்து லட்சம் கேட்டு வாங்கும் தன்ராஜ் கொரனானி அந்த பணத்தில்  தொழிலை  தொடங்காமல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சமுத்திரக்கனி கொடுத்த பணத்தை இழந்து விடுகிறார்.

இதனால் சமுத்திரக்கனி தன்ராஜ் கொரனானியை கோபமாக கண்டிக்க ஆத்திரமடையும் தன்ராஜ் கொரனானி சமுத்திரக்கனியை கொலை செய்ய திட்டமிடுகிறார்.

முடிவில் நாயகன் தன்ராஜ் கொரனானி தந்தையான சமுத்திரக்கனியை கொலை செய்ய போட்ட திட்டத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ராமம் ராகவம்’

நேர்மையான அரசாங்க அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பில் மகன் மீது அதிக பாசம் வைத்திருப்பவராகவும் தவறு செய்யும் போது அதை தட்டி கேட்பவராகவும் பாசத்துடன் சேர்ந்த கண்டிப்பான தந்தையாக இவரது நடிப்பு சிறப்பாக உள்ளது.

கதையின் நாயகனாக நடித்க்கும் தன்ராஜ் கொரனானி பெற்றவர்களின் மனதை புரிந்துக்கொள்ளாமல், அவர்களை எதிரியாக பார்க்கும் பிள்ளை கதாபாத்திரத்தில் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் பிரமோதினி மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்‌ஷா,சுனில் ஹரீஸ் உத்தமன்,

சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை

வெளிப்படுத்தியுள்ளனர்.

அருண் சிலுவேறு இசையும் , ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத் ஒளிப் பதிவும்  படத்திற்கு பக்க பலம் .

அப்பா- மகன் அன்பான உறவை பற்றிய அழுத்தமான கதையுடன் இன்றைய இளைய சமூகத்தி்ற்கு ஏற்ற வகையில் சிவபிரசாத் யானாலாவின் கதையில்  மாலியின் வசனத்தில்  திரைக்கதை எழுதி ரசிக்கும்படி  இயக்கியிருக்கிறார்  இயக்குனர் தன்ராஜ் கொரனானி.

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: