MediaTalks Logo
Header Advertisement
reviews
19 April 2025 at 16:10•1 Views

‘டென் ஹவர்ஸ்’  - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘டென் ஹவர்ஸ்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

சபரிமலை ஐயப்ப பக்தரான சிபி சத்யராஜ்  சேலம் மாவட்டத்திலுள்ள  ஆத்தூர் காவல்  நிலைய  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதுடன் அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் சொகுசு பஸ்ஸில் பெண் ஒருவர் கொடுரமாக தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸ் புகார் மையத்திற்கு தகவல் வருகிறது.

உடனடியாக சிபி சத்யராஜ் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலிசாருடன் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞரான ராஜ் ஐயப்பன்  அதே பஸ்ஸில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

கண்டக்டர் முருகதாஸ் மற்றும் டிரைவர் உட்பட பஸ்ஸில் பயணித்த அனைவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார் சிபி சத்யராஜ்.

பெண் கடத்தல் மற்றும் பஸ்ஸில் பயணித்த ராஜ் ஐயப்பன் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்கிற சுழலில் மிக சாமர்த்தியமாக தனது விசாரணையை தொடங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ்

முடிவில் காணாமல்  பெண் கடத்தல்   ,  தனியார் பஸ்ஸில் நடந்த இளைஞர் ராஜ் ஐயப்பன்  கொலை என இரண்டு வழக்குகளுக்கு உள்ள தொடர்பு என்ன ?

இரண்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்   ‘டென் ஹவர்ஸ்’  .

கதையின் நாயகனாக நடிக்கும் சிபி சத்யராஜ் ‘காஸ்ட்ரோ’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, பேருந்தில் கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற படி நடித்துள்ளனர் .

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை படத்திற்கு பலம்

தரமான ஒளிப்பதிவில் ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு.

ஒரு இரவில் நடைபெறும் கதையாக பெண் கடத்தல் மற்றும் இளைஞர்  கொலை ஆகியவற்றை  மைய கருவாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: