MediaTalks Logo
Header Advertisement
reviews
24 April 2025 at 16:08•1 Views

‘கேங்கர்ஸ்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘கேங்கர்ஸ்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

அரசன் கோட்டையில் உள்ள ஒரு மேல் நிலை பள்ளியின் தாளாளராக இருக்கும்  மைம் கோபி மற்றும் அவரது சகோதரரான அருள்தாஸ் போலீசின் துணையுடன் குற்ற செயல்களுடன்  பல அட்டுழியங்கள் செய்து வருகின்றனர் .

இந்நேரத்தில் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் காணாமல் போகிறார். அங்கு ஆசிரியராக பணிபுரியும் கேத்ரின் தெரசா மாணவி காணாமல் போனதையும் ,பள்ளியில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும்  தனிப்பட்ட முறையில் கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் அனுப்புகிறார்.

இந்நிலையில்  கேத்ரின் தெரசா புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை பள்ளிக்கு அனுப்புகிறது

ஏற்கனவே வடிவேலு அங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கும்  நேரத்தில்

புதியதாக பள்ளியின்  உடற்கல்வி ஆசிரியராக நாயகன்  சுந்தர் சி பள்ளிக்கு வருகிறார்.

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கேத்ரின் தெரசா  காவல்துறைக்கு புகார் கொடுத்ததால் நிர்வாகிகளான மைம் கோபியும் அருள்தாஸும் கேத்ரின் தெரசாவை ஆசிரியர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துகின்றனர்.

இதனையடுத்து சுந்தர் சி துணியால் முகத்தை மூடி கொண்டு மைம் கோபியையும் அருள்தாசையும்  அடித்து பந்தாடுகிறார்.

இதனை தெரிந்து கொண்ட கேத்ரின் தெரசா சுந்தர்.சியை  ரகசிய காவல்துறை அதிகாரி என நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் சுந்தர்.சி  காவல்துறை அதிகாரி அல்ல  என்ற உண்மை கேத்ரின் தெரசாவுக்கு தெரிய வருகிறது.

முடிவில் என்ன காரணத்திற்காக ஏன் மைம் கோபியையும் அருள்தாசையும் சுந்தர்.சி கடுமையாக தாக்குகிறார் ?

மைம் கோபி மற்றும் அருள்தாஸ் பின்னணியில் அவர்கள் இருவரையும் இயக்கும் மர்ம நபர் யார் ?

சுந்தர்.சி காவல் அதிகாரி இல்லை என்றால் காவல்துறை பள்ளிக்கு அனுப்பிய உண்மையான காவல் அதிகாரி யார் ? என்பதை காமெடி  கலாட்டவுடன் சொல்லும் படம்தான் ‘கேங்கர்ஸ்’.

கதையின் நாயகனாக நடிக்கும் சுந்தர்.சி மீண்டும்  வடிவேலுவை சேர்த்துக் கொண்டு தங்கள் கூட்டணி வலுவான வெற்றி கூட்டணி என்பதை நிரூபித்திருக்கிறார்.  ஆக்‌ஷன்  காட்சிகளை அதிரடி நாயகனாக அசத்துகிறார் .

பள்ளி உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் வடிவேலு,  வசனங்கள் மற்றும் உடல் மொழியில் காட்சிகள் செல்ல செல்ல  நகைச்சுவை புயலாக மாறி மீண்டும் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.

கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா

சிறப்பு தோற்றத்தில் வாணி போஜன் , மற்றும் விமல் வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு, காளை , ரிஷி , மதுசூதன ராவ் என படத்தில் நடித்த   அனைவரும் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலம் .

இசையமைப்பாளர் சத்யாவின் இசையுடன் ,பின்னணி இசை கதைகேற்றபடி பயணிக்கிறது

ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தியின் ஒளிப்பதிவில்  காட்சிகள் தரம் .

வெங்கட் ராகவனின் திரைக்கதை மற்றும் வசனம் படத்திற்கு பக்க பலம் .

படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு வலிக்க சிரிக்க வேண்டும் என்கிற கருத்தை மட்டுமே மனதில் வைத்து யாருமே எதிர்பாராத திருப்பங்களுடன் அனைவரும் ரசிக்கும்படி காமெடி திருவிழாவாக வழக்கமான காமெடி முத்திரையுடன்  படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் சுந்தர்.சி.

ரேட்டிங் - 4 / 5

Cast & Crew Details

Sundar .C

Vadivelu

Catherine therasa

Vani bhojan

Munish kanth

Bakhs  a

Kaalai

Hareesh peradi

Meme gopi

Arul doss

Santhana barathy

Vichu

Master prabhakar

Madhu suthan rao

Rishi

special appearance  - vimal

TECHNICIAN ;-

Written & directed by -

Sundar .C

Producers

khushbu sundar

(Avni Cinemax P Ltd),

A C S . Arunkumar

(Benzz Media Pvt Ltd)

Music  - C . Sathya

Screenplay & dialogues  - Venkatt ragavan

Cinematography  - E. Krishna moorthy

Editor  - pravin antony

Art director  - Gururaj

Stunts  - Rajasekar

Choreography  - Brindha  , dheena

Lyricist  - pa.vijay, arun bharathi , lavaradhan, super subhu,  madras miran , vettipaya venkat

PRO -  Sathish  (AIM)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: