MediaTalks Logo
Header Advertisement
reviews
27 April 2025 at 22:30•1 Views

’சுமோ’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’சுமோ’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

நாயகன் மிர்ச்சி சிவாசென்னை கடற்கரை ஓரத்தில் விடிவி கணேஷ் நடத்தி வரும் உணவகத்தில் அவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

நாயகன் மிர்ச்சி சிவா அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டில் சிறந்தவராக இருக்கிறார்.

மிர்ச்சி சிவா – ப்ரியா ஆனந்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

நாயகன் மிர்ச்சி சிவா ஒருநாள் பயிற்சி பெற கடற்கரைக்கு வரும் போது, அங்கு யோஷினோரி தாஷிரோ (ஜப்பான் சுமோ மல்யுத்த விளையாட்டு வீரர்) மயங்கிய  நிலையில்  கரை ஓரத்தில் இருக்கிறார்.

அவரை மிர்ச்சி சிவா அவரை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார் .

இதனையடுத்து யோஷினோரி தாஷிரோ தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுவதோடு சிறு குழந்தை போல நடந்து கொள்கிறார்.

மிர்ச்சி சிவா, யோஷினோரியை தன்னுடனே வைத்து பாதுகாத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் யோஷினோரியைப் பற்றிய தகவல் சிவாவிற்கு கிடைக்கிறது.

யோஷினோரி ஜப்பானில் மிகப்பெரும் சுமோ மல்யுத்த வீரர் எனவும், அவரை ஒரு கும்பல் கொலை செய்ய தேடிக் தேடிக்கொண்டிருந்தது என்பதை அறிந்து மிர்ச்சி சிவா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த எதிர்ப்பை மீறி யோஷினோரியை மீண்டும் சுமோ போட்டியில் கலந்து கொள்ள வைக்க வேண்டி ஜப்பானுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் மிர்ச்சி சிவா.

முடிவில் நாயகன் சிவா யோஷினோரியை ஜப்பானுக்கு அழைத்து சென்றாரா ?

ஜப்பானில் நடைபெறும் சுமோ போட்டியில் கலந்து கொண்டு அவரை மிர்ச்சி சிவா வெற்றி பெற வைத்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’சுமோ’.

அலைச் சறுக்கு விளையாட்டு வீரராக நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா வழக்கமான பாணியில் நடை, உடை பேச்சு என  நடிக்கிறார் .

கதைகேற்றபடி இயல்பாக நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த்.

யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடிக்கு பஞ்சம் . தியேட்டரில் ரசிகர்களின் அமைதியே இதற்கு சாட்சி .

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்கும் ரகம். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

சுமோ மல்யுத்த வீரரை மைய கருவாக வைத்து நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பில்  படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமின் படத்தன்  கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ரேட்டிங் -  2  /  5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: