MediaTalks Logo
Header Advertisement
reviews
30 May 2025 at 11:36•1 Views

‘ஜின் – தி பெட்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ஜின் – தி பெட்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

பாடகரான நாயகன் முகேன்ராவ் மலேசியா நாட்டில் பார்ட்டி நடக்கும் ஒரு விடுதியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு பாடகராக இருக்கிறார்.

சென்னையில் வாழும் குடும்பத்தினரான அப்பா இமான் அண்ணாச்சி, பாட்டி வடிவுக்கரசி ,அக்கா வினோதினி என அனைவரும் திருமணத்திற்காக முகேன்ராவுக்கு பெண் பார்க்கும் நிலையில் ,,,,

நாயகன் முகேன் ராவ். ஒப்பந்தம் முடிந்துவிட்டபடியால், அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வர தயாராகிறார்.

இந்நேரத்தில் மலேசியா நாட்டில் பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்லும் முகேன், அங்கிருக்கும் பெட்டி ஒன்றை பார்க்கிறார். அதில், ஜின் ஒன்றை அடைத்து வைத்திருப்பதாகவும் அது நல்ல ஜின் என கூறுகிறார் கடையில் வேலை செய்பவர் .

((இஸ்லாமியக் கலாச்சார வாழ்வியலில் ஜின் என்றால், ஒரு ஆவி அல்லது மாயப் பொருள். இது மனிதர்களைப் போல, ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு வேறுபட்ட உலகத்திலிருந்து மனிதர்களுக்கு உதவும் வகையில் வந்தவை. ஜின் களில் சில நல்ல குணம் கொண்ட ஜின்களும் உண்டு ,சில கெட்ட குணம் கொண்ட ஜின்களும் உண்டு )

மலேசியா நாட்டில் இருந்து முகேன்ராவ் வீட்டிற்கு கொண்டு வருவது நல்ல குணம் கொண்ட ஜின்.

அதை வாங்கிக் கொண்டு மலேசியாவிலிருந்து சென்னை வருகிறார் முகேன் ராவ்.

சென்னை வந்ததும் நாயகி பவ்யா திரிகாவை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ள, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் காதல் பெரியோர்கள் நிச்சயித்தபடி திருமணத்தில் முடிவடைகிறது.

முகேன் ராவ் எடுத்து வந்த ஜின்’னை, அவரது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடப்பதாக அவரது வீட்டில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவ்யா  திரிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நிலையில் மயக்கமாய் இருக்கிறார் .

குடும்பத்தில் உள்ள அனைவரும் பவ்யா  திரிகாவின் இந்த நிலைக்குக் காரணம் விட்டிலுள்ள ஜின் தான் என சொல்ல தான் ஆசையுடன் வாங்கி வந்த ஜின்’ஐ கோபத்தில் வெளியே தூக்கி வீசி விடுகிறார் முகேன் ராவ் .

முடிவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் பவ்யா  திரிகாவை கொடுரமாக தாக்கியது,,, முகேன் ராவ் ஆசையாய் வளர்த்து வந்த ஜின்’ஆ அல்லது வேறு பிரச்சனையில் அவரை தாக்கியது மர்ம நபர்களா ?

முகேன் ராவ் கோபத்தில் வெளியே தூக்கி வீசி எறிந்த ஜின்’ மீண்டும் அவருடன் இணைந்ததா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஜின்’

நாயகன் முகேன் ராவ் படத்தின் நாயகனாக காதல் ,நடனம் ,ஆக்க்ஷன் என இளமை துள்ளலுடன் நடித்தாலும் பல காட்சிகளில் முக பாவனைகளில் திறமையாக சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கலாம்.

கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் அழகான நாயகி பவ்யா திரிகா.

திரைக்கதைக்கு பக்க பலமாய் பால சரவணனின் காமெடி.

ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி ரித்விக் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .

விவேக் மெர்லின் இசையும் ,அருண் ராஜா ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

மலேசியாவிலிருந்து தன் சொந்த நாட்டிற்க்கு திரும்பும் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தான் ஆசையுடன் வாங்கி வந்த ஜின்’ னின் உதவியால் வெற்றி பெறுவதை மையமாக வைத்து குழந்தைகள் முதல் குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இயக்குனர் T R பாலா.

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: