MediaTalks Logo
Header Advertisement
cinema news
30 August 2026 at 22:14•1 Views

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்

உடல் எடையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியீடு!

'ஒரு வடக்கன் செல்பி', 'அச்சம் என்பது மடமையடா', 'FIR', 'களத்தில் சந்திப்போம்', 'தேவராட்டம்' மற்றும் 'சுழல் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார்.

தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.

அவரது இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கணிசமாக உயர்த்தியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: