top of page

100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!

  • mediatalks001
  • 1 hour ago
  • 2 min read

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , 'ஆடுகளம்' நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.‌ கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 'ஆரா பத்துக்கு பத்து' எனும் பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி சர்வதேச ஹிட் அடித்தது. ரேடியோ, ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என எல்லாவற்றிலும் பெரிய ஹிட் அடித்த ஆரா 10/10 பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பப்பாளி பழமே”, “கோவிந்தம்மா” உள்ளிட்ட பாடல்களும் ஹிட் அடித்து இணையத்தை கலக்கி வருகிறது.


நடிகர்கள்:


ஹிப்ஹாப் தமிழா ஆதி

கேதிகா சர்மா

சைத்ரா ஜே ஆச்சார்

ரம்யா ரங்கநாதன்

ஹர்ஷத் கான்

நாசர்

கருணாஸ்

யோகி பாபு

ஆடுகளம் நரேன்

கருணாகரன்

ஷா ரா


தொழில்நுட்பக் குழு


தயாரிப்பு: அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்

இசை: ஹிப்ஹாப் தமிழா

படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

பென்ஸ் மீடியா சிஇஓ: ஆர். மதன் குமார்

நிர்வாக தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்

ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

கலை இயக்கம்: வி. எஸ். தினேஷ் குமார்

தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி

நடனம்: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாபா

சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்

டிஜிட்டல் இன்டர்மீடியட்: நாக் ஸ்டுடியோஸ்

கலர்ஃபுல் கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்

விஎஃப்எக்ஸ்: 85FX, ஹோகஸ் போகஸ்

கூடுதல் வசனங்கள்: கரன் கார்க்கி மற்றும் நித்திஷ் டி

டைட்டில் கார்டு அனிமேஷன்: அஸ்வின் குமார்

மார்க்கெட்டிங்: பாங்க் டிஜிட்டல்

தயாரிப்பு மார்க்கெட்டிங் குழு: பீட்ரூட்

விளம்பர வடிவமைப்பு: ராகவார்ட்ஸ்

முடி மற்றும் ஒப்பனை வடிவமைப்பு: வேல்முருகன்

ஆடை உதவியாளர்: அருண்

ஸ்டில்ஸ்: பி. கே. ராஜா

ஒலி கலவை: கண்ணன் கணபத்

ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ் குமார்

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஹரி வெங்கட் சி

தயாரிப்பு மேலாளர்: விக்னேஷ் ரத்தினம்

மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 மீடியா)

மியூசிக் லேபிள்: சரிகம இந்தியா லிமிடெட்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page