MediaTalks Logo
Header Advertisement
cinema news
26 May 2026 at 15:43•1 Views

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 'சமவர்த்தி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகர் சத்ய தேவ் நடிக்கும்  'சமவர்த்தி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 16வது படமான 'சமவர்த்தி' பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகிறது

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா - புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, 'சமவர்த்தி' என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌

ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி - ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். 'சமவர்த்தி' ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌

சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து வரும் போது.. சத்ய தேவ் தனது ஹெட் போனில் அமைதியாக இசையை கேட்டுக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறார்.

இயற்கை மற்றும் வனத்தின் சாராம்சம் நிறைந்த ப்ரீ லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னணியில் உள்ள புலி ஆகியவை.. ஆர்வத்தை தூண்டும் வகையில் இயற்கையின் நுட்பமான குறிப்புகளை பிரதிபலிக்கிறது.

இப்படத்தின் தலைப்பும், போஸ்டரும் சத்ய தேவின் திரை வாழ்க்கையில் மிகவும் தீவிரமான - அதிரடியான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் புதிய உருவாக்கம் என்பதால்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

சத்யதேவ் இந்த படத்தின் மூலம் முற்றிலும் புதிய தளத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார். தனது உடல் வலிமையையும், அதன் தோற்றத்தையும் அதிகரிக்கும் ஒரு முழுமையான அதிரடி ஆக்சன் களத்திற்குள் அவர் திட்டமிட்டு நுழைகிறார்.

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு .. சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழும் அதிக ஆபத்துக்கள் நிறைந்த விசயங்களுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வகையான சுற்றுச்சூழல் அதிரடி திரில்லராக தயாராகிறது.

தொழில்நுட்பக் குழு :

கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார்

ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதுர்

படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி

ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் - தேவ் தீப் காந்திகுண்டு

இசை : சிஞ்சித் யெர்மில்லி

கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி.

நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம்.

தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி - ஜக்கிடி - சசிதர் ரெட்டி படமடி

இயக்கம் : அஜய் நாக் வி

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: