MediaTalks Logo
Header Advertisement
cinema news
26 October 2026 at 12:56•121 Views

'தர்மன்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'தர்மன்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா !

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா - தர்மன் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பரிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

Image
Image

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்‌ஷன் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘தர்மன்’, தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.

இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘தர்மன்’ — திரையரங்குகளில் ஒரு பிரம்மாண்ட அனுபவத்திற்கான பயணம் தொடர்கிறது!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: