MediaTalks Logo
Header Advertisement
cinema news
29 October 2026 at 11:29•9 Views

வில்லனாக ‘லவ் இங்க்’ திரைப்படத்தில் சுனில் ரெட்டி !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
வில்லனாக ‘லவ் இங்க்’ திரைப்படத்தில் சுனில் ரெட்டி !

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இன்றைய தலைமுறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் இங்க்’, நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன் சொல்லும் படமாக அமைவதுடன், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Image
Image

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் நடைபெற்றது. தற்போது படக்குழு மீண்டும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெறும். திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் படத்தைத் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேகராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினருக்கு பிடித்த படமாக ‘லவ் இங்க்’ நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். ரசிகர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும். இளைஞர்களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் ‘லவ் இங்க்’ இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்க, மகேந்திரன் வழங்கும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஐ. மருதநாயகம் மேற்கொள்ள, கலை இயக்குநராக ராமு தங்கராஜ் பணியாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

‘லவ் இங்க்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: