MediaTalks Logo
Header Advertisement
cinema news
25 November 2026 at 22:49•19 Views

ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் ‘தாயன்’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் ‘தாயன்’

ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ (Tatiana Babenko) மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தாயன்’.

இயக்குநர் பா. சதாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, ‘எதிர்நீச்சல்’ சீரியல் புகழ் ராதிகா வைரவேலவன் (சாருபாலா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இவர்கள் தவிர ரஷ்யா, சீனா மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடிகர்கள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

'தாயன்' படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமார் ராமச்சந்திரன் மேற்கொள்ள, இணை ஒளிப்பதிவாளர்களாக ப.சதீஷ்குமார் மற்றும் கலையரசன் பணியாற்றியுள்ளனர்.

சி.எஸ்.மார்ட்டின் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

Image
Image

படம் குறித்து இயக்குநர் பா.சதாம் பேசும்போது,

“ தாயம் கேள்விப்பட்டிருப்போம். விளையாடியிருப்போம். ஆனால் 'தாயன்' என்பதை சக்திகளை உருச் செய்த ஒருவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். தாயனின் சூப்பர் நேச்சுரல் திறனை இப்படத்தில் என்ஜாய் பண்ணிப் பார்க்கலாம்.

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லரை இரசிப்பவர்களுக்கு 'தாயன்' நிச்சயம் விருந்து படைப்பான்.

ஹாலிவுட் படங்களில் வேறு வேறு நாட்டைச் சேர்ந்த பல நடிகர்கள் ஒன்றாக பங்கேற்றிருப்பார்கள்.

நாங்களும் இப்படத்தை ஆரம்பிக்கும் போதே அதே ஐடியாவுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வது போலத்தான் ஆரம்பித்தோம்.

குறிப்பாக, இந்த ‘தாயன்’ உலகத்தில் என்னதான் நடக்கிறது, ஊரோ மொழியோ இதில் எதையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு த்ரில்லிங் சஸ்பென்ஸாகவே இருக்கும்.

தாயனின் திரைக்கதையை நான், சதீஷ்குமார் குளமந்தை, ராகினி கண்ணன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி என நான்கு பேர் எழுதியிருக்கிறோம்”

"எங்கள் படத்தின் மிகப் பெரிய பலமாக இசைஞானி இசையமைப்பதைப் பார்க்கிறோம். அவரது இசையால் படத்தின் காட்சிகள் தன்னை மெருகூட்டிக் கொள்ளும். பாடலையும் இசைஞானியே எழுதியுள்ளார். அதனால் 'தாயன்' அனைவருக்கும் பிடிக்கிற படமாக அமையும்" என்று கூறினார்

இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் உள்ளது படக்குழு.

நடிகர்கள் ; ராதிகா வைரவேலவன்(எதிர் நீச்சல் -சாருபாலா), யூரி பிலிப்போவ், சதீஷ்குமார் குளமந்தை, அலெக்செய் ஷெவ்சென்கோ, நெய்லியா, இம்மானுவேல், ஜாவித் அப்பாஸ், செர்கெய், நிவாஷ்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு: டாட்டியானா பாபென்கோ - பிரக்க்ஷை பாபு

எழுத்து மற்றும் இயக்கம் : பா. சதாம்

இசை : இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு : கிஷோர் குமார் ராமச்சந்திரன்

இணை ஒளிப்பதிவு:

ப. சதீஷ்குமார் - கலையரசன்

படத்தொகுப்பு: சி.எஸ்.மார்ட்டின் பால்

கலை இயக்கம்: எஸ்.ஜே. ராம்

திரைக்கதை:

பா. சதாம், யூரி பிலிப்போவ், சதீஷ் குமார் குளமந்தை, ராகினி கண்ணன்

தயாரிப்பு மேற்பார்வை :

K. செல்வம் சங்கர்

மக்கள் தொடர்பு:

A. ஜான்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: