MediaTalks Logo
Header Advertisement
cinema news
27 May 2026 at 23:05•1 Views

மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் 'லீடர்'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகும்  லெஜெண்ட் சரவணனின் 'லீடர்'

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது

லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து மற்றும் பரபரப்பான இயக்கத்தில் உருவான இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை பெற்றது.

'லீடர்' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலதரப்பட்ட ரசிகர்களும் ஆர்வமுடன் கேட்டு வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'லீடர்' திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது போன்றே ஓடிடியிலும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'லீடர்' திரைப்படத்தில் தன் குழந்தைக்காக சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பாசமிகு தந்தையாக லெஜெண்ட் சரவணன் நடித்துள்ளார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக ஒடிடியை நோக்கி 'லீடர்' வந்துக் கொண்டிருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: