MediaTalks Logo
Header Advertisement
cinema news
30 May 2026 at 11:06•1 Views

ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும்  சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: