MediaTalks Logo
Header Advertisement
cinema news
30 May 2026 at 11:21•1 Views

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு.

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் "ரஞ்சன்" படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.

இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.

திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: