MediaTalks Logo
Header Advertisement
cinema news
31 May 2026 at 16:04•1 Views

'பென்ஸ்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நடிகர் ரவி மோகன்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'பென்ஸ்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ள  நடிகர் ரவி மோகன்

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். நாயகனை மையமாகக் கொண்ட கதை, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது என வெவ்வேறு ஜானர்களில் நடிகராக தனது எல்லைகளை உடைத்துள்ளார்.

'பேராண்மை' போன்ற படங்களிலிருந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட 'தனி ஒருவன்' வரை, ரவி மோகனின் திரைப்படப் பயணமும், பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்கும் துணிச்சலும் அவரை தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் பன்முகத் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 'பென்ஸ்' படத்தில் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர்.

LCU-வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள 'பென்ஸ்' படத்தில் ரவி மோகன் இணைந்திருப்பது படம் மீது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரவி மோகன் படத்தில் இணைந்தது குறித்து, பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான மற்றும் பல்துறை திறன் கொண்ட நடிகர்களில் ரவி மோகனும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வித்தியாசமான திரைப்படங்கள், வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்கள் என இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர். திரையில் அவரின் ஆளுமை, நேர்மை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்துவதற்காக செலுத்தும் அர்ப்பணிப்பு என அவர் நடித்த ஒவ்வொரு படமும் தனித்துவமானது.

மேலும், வழக்கத்திற்கு மாறான திரைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என எந்த ஜானரிலும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வெகுசில நடிகர்களில் ரவி மோகனும் ஒருவர். 'பென்ஸ்' திரைப்படத்தில் அவர் இணைந்திருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்".

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’, மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில், வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'பென்ஸ்' திரைப்படமும் இணைந்துள்ளது.

ராகவா லாரன்ஸ், ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மல்டி ஸ்டாரர் படங்களின் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: