MediaTalks Logo
Header Advertisement
cinema news
6 June 2026 at 11:52•1 Views

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு...ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு...ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

சென்னை, இந்தியா: விரைவில் வெளியாகவுள்ள 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

உலகளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக் மற்றும் 'டெக்சாஸ் டைகர்' படத்தின் இளம் குழுவினர் இணைந்துள்ளது இந்த படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான வியாபாரம் என திரையுலகினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான புரோமோஷன்ஸ் மூலம், படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் முழுமையான திரையரங்கு அனுபவமாக 'டெக்சாஸ் டைகர்' உருவாகி வருகிறது.

படத்தின் இசை, வெளியீட்டு விவரங்கள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்,

எழுத்து, இயக்கம்: ‘பேமிலி படம்’ புகழ் செல்வகுமார் திருமாறன்,

நடிகர்கள்: ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட்) சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: