MediaTalks Logo
Header Advertisement
cinema news
16 June 2026 at 17:33•1 Views

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

'AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

’AA23’ திரைப்படம் பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தருணங்கள்தான் அல்லு அர்ஜுன் அசல் பான் இந்தியா நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: