MediaTalks Logo
Header Advertisement
cinema news
24 June 2026 at 23:42•1 Views

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.

சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: