MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 July 2026 at 15:05•1 Views

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின்  ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது!

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.

இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் - பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.

இருவரின் உடைத் தேர்வைப் பார்க்கும்போது, அவர்கள் வகுப்புத் தோழர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல், இயல்பான உடல்மொழி மற்றும் மனதை வருடும் புன்னகை ஆகியவை, இருவருக்கும் இடையிலான நெருக்கம், நட்பு மற்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பந்த்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியையும், பாஸிடிவ் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, மனதை வருடும் உணர்வுகள் மற்றும் கண்கவர் காட்சிகளால் நிறைந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்:

துல்கர் சல்மான்

பூஜா ஹெக்டே

தொழில்நுட்பக் குழு:

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி

தயாரிப்பு – சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்

இணை தயாரிப்பாளர் – கோபிசந்த் இன்னமூரி

தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி

இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: