MediaTalks Logo
Header Advertisement
cinema news
14 July 2026 at 16:08•1 Views

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில் !

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார்.

இயக்குநராக ஏற்கனவே தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துள்ள ஷிவானி செந்தில், இந்தப் புதிய படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

PRO மணி மதன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: