MediaTalks Logo
Header Advertisement
cinema news
14 July 2026 at 22:04•1 Views

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படம் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.

சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன், இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

பல சகாப்தங்களாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இந்தப் படத்தில் இணைவது, தயாரிப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையிலும் திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ. ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங் – சரண், தமிழில் PRO - சதிஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: