MediaTalks Logo
Header Advertisement
cinema news
5 August 2026 at 12:03•1 Views

அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் ‘லவ் ஓ லவ்’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில்  ‘லவ் ஓ லவ்’

OTT-யிலும் வெற்றிக் கொடி நாட்டும் ‘லவ் ஓ லவ்’ – அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் சாதனை!

திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், தற்போது OTT தளத்திலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இப்படம், பார்வையாளர்களின் பேராதரவால் தற்போது நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்து, மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இளைஞன், தனது வாழ்க்கையை ஒரு நாள் தன்னுடைய பார்வையில் வாழ்ந்து பார்க்கும்படி காதலியிடம் சவால் விடுப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அதன் பின்னர் காதல், பொறுப்பு, உறவுகளின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தும் வகையில் உணர்வுபூர்வமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கதை நகர்கிறது.

உற்சாகமான   திரைக்கதை, அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுகள், மனதைத் தொடும் நடிப்பு மற்றும் சுவாரஸ்யமான காட்சியமைப்புகள் ஆகியவை அனைத்து வயதினரிடமும் படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், ஜூலை 31 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் வெளியீட்டை கண்டது. வெளியான குறுகிய காலத்திலேயே அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள ‘லவ் ஓ லவ்’, பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் வலுவான வாய் வழிப் பாராட்டுக்களால்,  தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்துள்ளது.

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள், மனதை வருடும் காதல் மற்றும் உறவுகளின் அழகை உணர்த்தும் இந்த வெற்றிப் படத்தை தற்போது,  அமேசான் பிரைம் வீடியோவில் ‘லவ் ஓ லவ்’, கண்டு மகிழலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: