MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 August 2026 at 11:24•1 Views

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” (

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” (

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது.

பன்முகரி திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி  இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது.

ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”  ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பாராட்டுகளைப் பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான படைப்பை தயாரிக்கின்றனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தையும் அவரது வித்தியாசமான பைத்தியக்காரத்தனத்தையும் ஒரு தனித்துவமான பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது.

கால பைரவா, ஃபஹத் பாசில்  மற்றும் சாரா ஆகியோர் இடம் பெறும் சிறப்பு இசை வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் கூலான பாடலாகத் தொடங்கும் இது, கால பைரவா தனது துள்ளல் நிறைந்த இசையுடன் களமிறங்கியதும் முழுக்க முழுக்க வித்தியாசமான உற்சாகமான அனுபவமாக மாறுகிறது. இளம் இசையமைப்பாளரின் மின்னல் வேக இசையமைப்பும், அவரது நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்கின்றன.

கால பைரவா மற்றும் வாசி இணைந்து இந்தப் பாடலுக்கான கவர்ச்சிகரமான வரிகளை எழுதியுள்ளனர். சூரியின் துணிச்சலான தன்மையையும், எந்தவொரு சவாலான பணியாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் எளிதானது என்பதையும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களே பாடலையும் மிகுந்த உற்சாகத்துடன் பாடியுள்ளனர். பகத் பாசிலின் எனர்ஜியும், அவரது வைப்பும் ‘ஆவேசம்’ படத்தின் ரங்கா சேட்டாவை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரது அழகான நடன அசைவுகள், அனைவரையும் கவரும் புன்னகை மற்றும் வசீகரம் ஆகியவை பார்ப்பதற்கு விருந்தாக அமைந்துள்ளன. சாராவும் இந்த வேடிக்கையான இசை வீடியோவில் இணைந்து, பாடலை மேலும் சிறப்பாக்குகிறார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆல்பத்தின் தொடக்கமே ஒரு சார்ட்பஸ்டர் வெற்றியாக அமைந்துள்ளது. “டோன்ட் டிரபிள் த டிரபிள்”  ( Don’t Trouble the Trouble )  திரைப்படம் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படம் 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிகர்கள்:

ஃபஹத் பாசில் , சாரா, சௌரப் சச்தேவா மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: ஷஷாங்க் எலெட்டி

பேனர்கள்: Arka Mediaworks & Showing Business

தயாரிப்பாளர்கள்: ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா

இசை: கால பைரவா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: