MediaTalks Logo
Header Advertisement
cinema news
30 August 2026 at 22:08•1 Views

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'

சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.

இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது.

அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில்

பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.

கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இந்தப் பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

இப்படத்தின் கதை திரைக்கதை ஒரு பக்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதில் பங்களித்துள்ள நடிப்புக் கலைஞர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும்.

பிக் பாஸ் புகழ் சித்து இதில் ஒரு புதிய பரிமாணத்தில் முகம் காட்டியிருக்கிறார்.கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் இவர் வருகிறார். அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா இதில் சித்துவின் மனைவியாக ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்றொரு பிக்பாஸ் முகமாகி இன்று பிரபல நடிகையாக இருக்கும் ரித்விகா இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.அவர் நடித்துள்ள பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும்.

நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை தொடரும் சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

இது ரசிகர்களுக்கு ஒரு நல்லதொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கியதால் பொறுமையாகப் படத்தைச் செதுக்கி செதுக்கி முழுமையான செய்தொழில் நேர்த்தியுடன் உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.

படத்தைப் பார்த்த திரை உலகப் பிரமுகர்கள் அனைவருமே இது ஒரு நம்பிக்கைக்குரிய படமாக மாறி இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள்.

இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. 'ஜனநாயகன்' வெளிவந்ததால் வெளியீட்டுத்தேதி மாற்றி வைக்கப்பட்டது. எனவே வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் வெளிவர இருக்கிறது.

ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: