MediaTalks Logo
Header Advertisement
cinema news
3 September 2026 at 00:13•1 Views

‘மூன்வாக்’ - 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வரு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘மூன்வாக்’ - 2026  தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வரு

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்

ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஜாலியான சிறப்புத் தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுவது படத்தின் மற்றொரு பெரிய ஹைலைட் ஆகும்!

2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள ‘மூன்வாக்’, நகைச்சுவை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைத்து ஒரு கலகலப்பான திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு மகிழக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தேவைப்படும் இந்தக் காலத்தில், பண்டிகைக் காலத்திற்காகவே சிறப்புமிக்க ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக 'மூன்வாக்' வருகிறது.

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods)-ன் நிறுவனர் (Founder & CEO) மனோஜ் என்.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில்: "தீபாவளி என்பது குடும்பங்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருவிழா, அதே வேலையை எங்களுடைய 'மூன்வாக்' திரைப்படமும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த படம் மகிழ்ச்சி, சிரிப்பு, இசை மற்றும் நடனத்தின் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வந்து, முகம் நிறைய சிரிப்போடு திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு திரைப்பட அனுபவத்தைப் பெற 'மூன்வாக்' குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்."

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஏத்து'

(Yethu), ‘டிங்கா’ (Tinga) மற்றும் ‘மகரினா’ (Macarena) ஆகிய மூன்று பாடல்களும் உலகெங்கிலும் உள்ள இசை மற்றும் நடனப் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ (Mayile) என்ற நான்காவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆற்றல் மிக்க இசை, பொழுதுபோக்கு நிறைந்த கதைக்களம் மற்றும் மனதை மகிழ்விக்கும் அம்சங்களுடன், 2026 தீபாவளிப் பண்டிகையைச் சிரிப்பால் நிரப்பும் ஒரு சிறப்பான குடும்பக் கொண்டாட்டமாக 'மூன்வாக்' அமையவுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்-ஷாஜியா நடன இயக்கம் செய்துள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'மூன்வாக்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் (Romeo Pictures) பெற்றுள்ளது, மேலும் இசை உரிமையை லஹரி (Lahari Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: