MediaTalks Logo
Header Advertisement
cinema news
17 September 2026 at 23:19•1 Views

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

Janagiraman
Janagiraman@janagiraman
செய்தி ஆசிரியர்
நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.

‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாடலாக மாறியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் போதும், ‘AOT’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான எதிர்பார்ப்பும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த உற்சாகமும் அதிகரித்து வருகிறது.

துல்கர் சல்மான் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதும், இயக்குநர் பவன் சாதினேனியின் தனித்துவமான படைப்பாற்றலும், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும் இணைந்து ‘AOT’ திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான படைப்பாக உருவாக்கி வருகிறது.

திறமையான ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். வலுவான தொழில்நுட்பக் குழுவும், திறமையான நட்சத்திரப் பட்டாளமும் இணைந்துள்ளதால், ‘AOT’ ஆகாசம்லோ ஓக தாரா திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கத் தயாராகி வருகிறது.

நடிகர்கள்: துல்கர் சல்மான்,சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: பவன் சாதினேனி

கதை: கங்கராஜு குன்னம்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங்

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்

தயாரிப்பாளர்கள்: சந்தீப் குண்ணம், ரம்யா குண்ணம் – லைட்பாக்ஸ் மீடியா

வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: