MediaTalks Logo
Header Advertisement
cinema news
27 September 2025 at 21:43•4 Views

'அந்த 7 நாட்கள்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'அந்த 7 நாட்கள்’ - விமர்சனம்

வானியல் ஆராய்ச்சி மாணவரான நாயகன் அஜிதேஜ்  தன் வீடு எதிரே குடியிருக்கும்  நாயகி  ஸ்ரீ ஸ்வேதாவை பார்த்ததும் காதல் கொள்ள இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கிறார்கள்.

இந்நிலையில் நாயகன் அஜிதேஜ் அதிசய சூரிய  கிரகணத்தின் போது ஆராய்ச்சியில் ஈடுபட  அந்த ஒளிக்கதிர் ஏற்படுத்தும்  பாதிப்பால் அதிசய சக்தி ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் பிறருக்கு நடக்க இருக்கும் கெட்ட விசயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகி   ஸ்ரீ ஸ்வேதா கண்ணை பார்க்கும் நாயகன்  இன்னும் 7 நாட்களில் தனது காதலி இறந்து விடுவாள் என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனையடுத்து காதலியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் நாயகன் அஜிதேஜ்

முடிவில் நாயகன் அஜிதேஜ் 7 நாட்களுக்குள் நாயகி ஸ்ரீ ஸ்வேதாவை காப்பாற்றினாரா?

இறுதியில் காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் 'அந்த 7 நாட்கள்’

நாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பில் இளையராஜா பாடலை போட்டு நாயகியை காதலிப்பது,  நாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வது என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதா கண்களாலே கவர்கிறார். நோய் பாதிக்கப்பட்டவராக தன் வலியை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக  படத்தின் இறுதிக்காட்சியில் இவரது நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், நாயகியின் தந்தையாக நடித்திருப்பவர்  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

கோபிநாத் துரை ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

காதல் கதையுடன்  ஃபேண்டஸி மற்றும் அறிவியல் அதிசயத்தை சொல்வதுடன் சமீபத்திய தெருநாய்கள் கடிப்பது பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தை திரைக்கதையோடு பயணிக்க வைத்து இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  எம் சுந்தர்

ரேட்டிங் : 3/5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: