top of page

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்துள்ள இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

  • mediatalks001
  • Oct 10
  • 1 min read

ree

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  இணைந்துள்ளார்.


தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ்,  (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.


தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.


இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எமோஷன் (Emotion) ஆக்‌ஷன்  மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த  புதுமையான  இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.


நடிகை தபு  மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.


படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.


இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi  படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய் குமார்


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

வழங்குபவர் - சார்மி கௌர்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ்

இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

CEO : விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

Comments


©2020 by MediaTalks. 

bottom of page