ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' டிரெய்லர் உறைய வைக்கும் பல திரில்லர் காட்சிகளை கொண்டுள்ளது!
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது.
2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது.
இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான 'மனிதன்', 'என்றென்றும் புன்னகை' ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது இயக்கத் திறமையை நிரூபிக்கும்படி டிரெய்லர் அமைந்திருப்பது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் மற்றும் பல பிரபலமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'இறைவன்' படம் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தொழில்நுட்ப குழு விவரம்:
தயாரிப்பு : சுதன் சுந்தரம் & ஜெயராம் . G,
எழுத்து மற்றும் இயக்கம்: ஐ. அகமது,
இசை : யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்,
எடிட்டர் : ஜே.வி.மணிகண்ட பாலாஜி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி,
நிர்வாக தயாரிப்பாளர்: அருணாசலம்
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
வசனம்: சச்சின், கார்த்திகேயன் சேதுராஜ்,
உடைகள்: அனு வர்தன் (நயன்தாரா),
பிரியா கரண் & பிரியா ஹரி,
விளம்பர வடிவமைப்புகள்: கோபி பிரசன்னா.
top of page
Search
©2020 by MediaTalks.
bottom of page
Comments