top of page

இந்த ஆண்டு வரும் டிசம்பர் 1ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் 'அனிமல்'

mediatalks001

இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று 'அனிமல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'அனிமல்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.


ரன்பீர் கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அனிமல்'. இந்தத் திரைப்படம் தற்போது எதிர்வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெள்ளி திரையில் வெளியாகவிருக்கிறது. திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வெளியீட்டு தேதியில் சிறந்த உள்ளடக்கத்துடனும், தரமான பிரம்மாண்டத்துடனும் வெளியாகிறது என்ற உறுதிமொழியுடன் வருகிறது.


விதிவிலக்கான பாணியில் கதை சொல்வதில் தனித்துவமான அடையாளத்தை பெற்றவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. ஒரு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை காட்சியாகவும், கேட்கக் கூடியதாகவும் வழங்குவதற்கான தனது முழுமையான அர்ப்பணிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.


சமூக வலைதள பக்கத்தில் அவருடைய பதிவின் மூலம் அவர், அனிமல் மீதான தனது ஆர்வத்தையும், ஐந்து மொழிகளிலும் சமமான தாக்கம் மற்றும் சக்தி வாய்ந்த பாடல்களுடன் படத்தின் மேம்பட்ட பதிப்பு தயாராகியிருக்கிறது என பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த கூடுதல் நேரம்... படத்தின் ஒவ்வொரு அம்சமும் மிக உயர்ந்த தரத்தை கொண்டிருக்கிறது என்பதனை உறுதி செய்து, உள்ளடக்கத்தை மேலும் செழுமைப்படுத்தவும், சிறப்பானதாக மாற்றவும் குழுவை அனுமதித்திருக்கிறது.


அனில் கபூர், ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி திம்ரி உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள். இந்த கிளாசிக் கதையை பிரபல தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.


'அனிமல்' திரைப்படத்தை டி-சிரீஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் & கிரிஷன்குமார், சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முராத் கெடானி மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸின் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

コメント


©2020 by MediaTalks. 

bottom of page