top of page

'மாடர்ன் லவ் சென்னை' யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

  • mediatalks001
  • May 16, 2023
  • 1 min read

ree

அமேசான் அசல் படைப்பான 'மாடர்ன் லவ் சென்னை' யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு


அமேசான் ஒரிஜினல் தொகுப்பான 'மாடர்ன் லவ் சென்னை' எனும் படைப்பிலிருந்து 'யாயும் ஞானமும்..' எனத் தொடங்கும் முகப்பு பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியான பிறகு, பிரைம் வீடியோ தனது இசை ஆல்பத்திலிருந்து 'ஜிங்க்ருதா தங்கா..' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை வெளியிட்டிருக்கிறது. சென்னை மாநகர மக்கள் பேசும் மொழியின் பாணியில் இடம்பெற்ற இப்பாடலின் வரிகளை பாக்கியம் சங்கர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியிருக்கிறார்.


இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'லாலகுண்டா பொம்மைகள்' எனும் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த பாடல், தொடரின் சாரம்சத்தை அழகாக படப்பிடித்து காட்டியிருப்பதுடன், பார்வையாளர்களுடனான உணர்ச்சிகளுடன் தொடர்புப் படுத்தி சென்னை வாழ் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. இந்தப் பாடலின் மெல்லிசையும், சென்னை நிலவியல் பின்னணியில் வாழும் மக்களின் பேசும் மொழியில் இடம் பெற்ற பாடல் வரிகளும், பார்வையாளர்களின் இதயத்தை வருடி அன்பால் மிருதுவாக்குகிறது.


'மாடர்ன் லவ் மும்பை' மற்றும் 'மாடர்ன் லவ் ஹைதராபாத்'தின் வெற்றியைத் தொடர்ந்து 'மாடர்ன் லவ் சென்னை', எல்லைகளைக் கடந்த உறவுகளை ஆராய்கிறது. மேலும் சென்னை களப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தமான கதைகளின், கலவையான உணர்வுகளை விவரிப்பதால் பார்வையாளர்களின் இதயங்களை கவரும். இந்தத் தொடர் மே 18ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page