தமிழ்நாட்டில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்காக முத்தையா முரளிதரன் குடும்பம் இலங்கை செல்கிறது.
பின்னாளில் இலங்கையில் உள்ள கண்டியில் பிஸ்கட் கம்பெனி நடத்தும் வேல ராமமூர்த்திக்கும் ஜானகி சுரேஷுக்கும் மகனாக பிறக்கிறார் முத்தையா முரளிதரன்.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் முரளிதரன் 1977 ஆம் ஆண்டு நடக்கும் சிங்கள வன்முறையால் சிறுவனாகிய முத்தையா முரளிதரனை பாதுகாப்புக்காக காப்பகத்தில் சேர்க்கிறார் ஜானகி சுரேஷ் .
பள்ளிப் பருவத்தில் இருந்து கிரிக்கெட்டில் திறமையாக விளையாடும் முத்தையா முரளிதரன் பள்ளிக்காக விளையாடும்போது மிகத் திறமையாக பவுலிங் போடுகிறார்.
சில வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியா அணியுடன் இலங்கை அணி விளையாடும் போது பவுலிங் போடுவதில் ஆஸ்திரேலியா அணி திறமையாக இருக்கின்ற நேரத்தில்,,, இலங்கை அணி சார்பில் உள்ளே நுழைகிறார் சுழல் பந்து வீசுவதில் திறமைபெற்ற வீரனான முத்தையா முரளிதரன்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி நடுவர் செய்யும் அரசியலால் முத்தையா முரளிதரனுக்கு முழங்கை பிரச்சனை இருப்பதாக அவரை விளையாட அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இந்நேரத்தில் ஐசிசியின் அனுமதி பெற்ற பின்னும் பல பிரச்சனைகளை சந்திக்கும் முத்தையா முரளிதரன்,,,, முடிவில் கிரிக்கெட் விளையாட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்து எப்படி உலக சாதனை படைத்தார் என்பதை சொல்லும் படம் தான் '800'
கதையின் நாயகனாக மதுர் மிட்டல்,,,,, முத்தையா முரளிதரன் என்கிற கிரிக்கெட் வீரனாக சுழல் பந்து வீசும் போது உடல் மொழியில் முக வெளிப்பாட்டில் ஒவ்வொரு காட்சியிலும் கவனமாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்
முத்தையா முரளிதரனின் மனைவியாக நடிக்கும் மகிமா நம்பியார் கதைக்கு ஏற்றபடி இயல்பாக நடித்திருக்கிறார்
ஈழத் தமிழர்களின் தலைவன் பிரபாகரனாக நடித்திருக்கும் நரேன் ஒரு காட்சியில் வந்தாலும் கம்பிரமான நடிப்பில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்
வேல ராமமூர்த்தி ,ஜானகி சுரேஷ் ,பத்திரிகை நிருபராக வரும் நாசர் ,சக நிருபராக நடிக்கும் ஜானி, கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரண துங்காவாக நடிக்கும் கிங் ரத்தினம், ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜாப் , ரித்விக் பிரிதிவி என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர் .
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
இலங்கை கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கையை யாரும் அறியப்படாத சம்பவங்களுடன் பல தடைகளைத் தாண்டி அவர் கடந்து வந்த பாதைகளை மையமாகக் கொண்ட கதையுடன்,,, கிரிக்கெட் விளையாட்டில் திறமையாக விளையாடும் போதே அவர் சந்திக்கும் பிரச்சினைகளை இயல்பாக சொல்வதுடன் இலங்கை அணியில் சேர்ந்தவுடன் விளையாட்டில் உள்ள அரசியலை உடைத்தெறிந்து மிகப்பெரிய சவாலாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைப்பதை விறுவிறுப்பான அழுத்தமான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீபதி.
ரேட்டிங் ; 3.5 / 5
Comentarios