‘எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரவீர் ஷெட்டி!
மொழித் தடைகளைத் தாண்டிய அனைத்து மக்களும் கொண்டாடும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘எங்கஜ்மெண்ட்’(Engagement) திரைப்படத்தின் மூலம் பல திறமைகள் கொண்ட நடிகர் பிரவீர் ஷெட்டி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘சைரன்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரவீர் ஷெட்டி, தனது சிறப்பான நடிப்புத் திறமையால் அபரிமிதமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பான் இந்தியா நாயகனாக உருவெடுக்க இருக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட திரைப்படமாக உருவாக இருக்கும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் தற்போது ப்ரீ புரொடக்ஷன்ஸ் கட்டத்தில் உள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் முழுமையாக முடிவடைந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
’ரேவ் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜு போனாகானி இப்படத்தை தனது லட்சியத் திரைப்படமாக இயக்குகிறார். அவரது விரிவான திரைப்படத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற தயாரிப்பாளர் ஜெயராம் தேவசமுத்திரம் இணைந்து பெரும் எதிர்பார்ப்புமிக்க ஒரு திரைப்படமாக இப்படத்தை உருவாக்க இருப்பதோடு, கார்ஷீர், டார்ஜிலிங், கொடைக்கானல், உதய்பூர் மற்றும் கோவா போன்ற அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, மிகப்பெரிய திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
’எங்கஜ்மெண்ட்’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் பிரவீர் ஷெட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கவுடா நடிக்கிறார். ‘பிரவீணா’ படம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் குறிப்பிடத்தக்க ரசிகர்களை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா கவுடா, பிரவீர் ஷெட்டி ஜோடி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்கள்.
நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட பார்வையாளர்களை கவரும் வகையில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஒரே சமயத்தில் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
வெங்கட் மன்னம் ஒளிப்பதிவு செய்யும் இப்பத்திற்கு திலீப் பண்டாரி இசையமைக்கிறார். ரவி.கே படத்தொகுப்பு செய்கிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய காதல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டும் இன்றி திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் ஒரு அழுத்தமான கதைக்களமாகவும் உருவாகும் இப்படம், சமீபத்தில் வெற்றி பெற்ற பான் இந்தியா திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments