top of page
mediatalks001

ZEE5 தளத்தில் பெரும் சதிகளுக்குப் பின்னால் மறுக்கப்படும் காதல் கதை "பருவு"


பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை "பருவு" இப்போது உங்கள் ZEE5 தளத்தில் !!



~ ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான ​​"பருவு" தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது ~



சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​"பருவு" சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் "பருவு" பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.



காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது.



ZEE5 இல் "பருவு" இன்றிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது. ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பார்க்கலாம்.



ZEE5 ஒரிஜினல் சீரிஸான ​​‘பருவு’ தெலுங்கு மற்றும் தமிழில் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்!

コメント


bottom of page