top of page

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்

  • mediatalks001
  • Oct 12, 2024
  • 1 min read
ree


மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!


ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது.


விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.


அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது.  வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது.  தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீமாகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம்  மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!


Comments


©2020 by MediaTalks. 

bottom of page