இந்திய ராணுவத்தில் 2014ஆம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிகளின் மோதலில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ''அமரன்''.
பள்ளி பருவ காலத்திலேயே இந்திய ராணுவ வீரனாக வேண்டும் என்ற ஆசையில் பள்ளி நாட்களில் வளர்கிறார் நாயகன் சிவகார்த்திகேயன். வீட்டின் செல்ல பிள்ளையாக சிவகார்த்திகேயன் இருப்பதால் தாயான கீதா கைலாசம் அவரது ஆசைக்கு தடை போடுகிறார் .
இந்நிலையில் வளர்ந்த பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது தன் கல்லூரி தோழியான மலையாளப் பெண்ணான சாய் பல்லவியை காதலிக்க ,,,, காதல் நாட்களிலேயே கல்லூரி படிப்பை முடித்த பின் ராணுவத்தில் சேர்கிறார்.
ராணுவத்தில் சேர்ந்த சிவகார்த்திகேயன் சென்னை பரங்கிமலை ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் ராணுவப்,பயிற்சி பெற்று, 22ஆவது பட்டாலியன் ராஜ்புத் ரெஜிமெண்ட்டில் லெஃப்டினன்ட் ஆகி கேப்டனாக பதவி உயர்வு பெற்று காதலி சாய் பல்லவியை திருமணம் செய்து கொள்கிறார் .
திருமணத்திற்கு பின் ஒரு மகளுக்கு தகப்பனாகும் சிவகார்த்திகேயன் லெபனானில் யுனைடட் நேஷன்ஸ் மிஷனில் பணியாற்றி, , மேஜராகப் பதவி உயர்வு பெற்று, 44 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவில் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு, ஒரு பயங்கர தீவிரவாதியை சுட்டுக் கொன்று உயர் பதவியான மேஜர் பதவிக்கு உயர்கிறார். தாக்குதலில் பலியான தீவிரவாதியின் தம்பி சிவகார்த்திகேயனை பழி வாங்க துடிக்கிறான் .
இந்நேரத்தில் காஷ்மீரில் ஒரு வீட்டில் தீவிரவாதியின் தம்பி பதுங்கியிருக்கும் தகவல் அறிந்தவுடன் அவனை சுட்டு வீழ்த்த தன் குழுவுடன் தலைமை ஏற்று செல்கிறார் சிவகார்த்திகேயன் .
முடிவில் அந்த தீவிரவாதியை கண்டுபிடித்து சிவகார்த்திகேயன் சுட்டு கொன்றாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’அமரன்’’
மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் கம்பிரமான உடற்கட்டில் இராணுவ வீரருக்கே இருக்கும் மிரட்டலான உடல் தோற்றத்தில் திறமையான நடிப்பில் பெற்றோர்களுடன் காட்டும் அன்பான பாசம் , காதல் மனைவியான சாய் பல்லவியிடம் பழகும் இயல்பான நெருக்கம் , சக வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை என அனைத்து காட்சிகளிலும் உணர்வுபூர்வமான நடிப்பில் மேஜர்முகுந்தனாக வாழ்கிறார் .
படத்தின் நாயகியாக சாய்பல்லவி,,, கதையின் பலமான முக்கிய கதாபாத்திரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருடன் தன் காதலுக்காக போராடும் போதும் , இயல்பான மனநிலையில் தன் கணவனிடம் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் , கணவனின் இறப்பு செய்தி அறிந்தவுடன் கதறி அழாமல் வீர மரணம் அடைந்த ராணுவ வீரனின் மனைவியாக இந்து ரெபெகா வர்கீஸாக கதையுடன் இணைந்து பாராட்டும்படியான நடிப்பில் வாழ்ந்துள்ளார் சாய் பல்லவி .
ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையும்,, பின்னணி இசையும் படத்திற்கு மிக பெரிய பலம் .
ஒளிப்பதிவாளர் சி எச் சாய்யின் திறமையான ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பிரம்மாண்டம்.
2014ஆம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிகளின் மோதலில் இந்திய ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அழுத்தமான இயல்பான திரைக்கதையில் மத்தியஅரசின் விருதை பெறுமளவில் உணர்வுப்பூர்வமிக்க இயல்பான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் கெளரவமான மரியாதையை தரும் படமாக இயக்குனருக்கு அமைந்தது பாராட்டுக்குரியது.
ரேட்டிங் - 4.5 / 5
Kommentare