top of page

'ப்ளூஸ்டார்' - பட விமர்சனம்




1998ஆம் ஆண்டு நடக்கும் கதையாக சென்னை அரக்கோணத்தில் வாழ்கின்ற அசோக் செல்வனும் ,ஷாந்தனு பாக்யராஜும் சாதியில் இரு பிரிவை சேர்ந்தவர்கள். கிரிக்கெட்டில் ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டனாக அசோக் செல்வனும் ஆல்பா பாய்ஸ் அணியின் கேப்டனாக ஷாந்தனு பாக்யராஜும் இருக்கின்றனர் .

சில ஆண்டுகளுக்கு முன் பகவதி பெருமாள் ப்ளூ ஸ்டார் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்து ஆல்பா பாய்ஸ் அணியை தோற்கடித்து பல வெற்றிகளை குவிக்க இதனால் இரு அணிகளுக்கும் எப்போதும் பகை இருந்து கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் பகவதி பெருமாள் போட்டியின் போது தாக்கப்பட்டு படுகாயமடைகிறார். அந்த சம்பவத்திற்குப் பின் அந்த கிராமத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என காவல் துறை முடிவு செய்து அமல்படுத்துகிறது. இதனால் இரு அணியும் எப்போழுதும் பகையாளிகளாகவே வலம் வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் திருவிழாவில் இரு அணியினரும் விளையாட முன் வருகிறார்கள். அந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக   ஷாந்தனு பாக்யராஜ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றன

சந்தோஷத்தில் இருக்கும்  ஷாந்தனு பாக்யராஜ் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். உயர் சாதியினரின் எம்சிஎச் அணியின் பொறுப்பாளர் ஷாந்தனுவை கடுமையாக அவமானப்படுத்த இதை பார்க்கும் அசோக் செல்வன், ஷாந்தனுவுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார்.

ஒருகட்டத்தில் பகவதி பெருமாளின் ப்ளூஸ்டார் அணியும் ஆல்பா அணியும் ஓர் அணியாக மாறி எம்சிஎச் அணியை எதிர்த்து விளையாடுகின்றனர்.. முடிவில் இரு அணிகளும் சேர்ந்து விளையாடி எதிர் அணியை தோற்கடித்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ப்ளூஸ்டார்'

நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் காதல் நாயகனாகவும் ,,, கோபம் வரும்போது இயல்பான உடல் மொழியில் உணர்ச்சிமயமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாந்தனு பாக்யராஜ் கதைக்கேற்றபடி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

நாயகியாக கீர்த்தி பாண்டியன் ,பகவதி பெருமாள், அசோக் செல்வனின் தம்பியாக பிரித்விராஜன், ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்ட அசோக் செல்வனின் அம்மாவாக லிஸ்ஸி ஆண்டனி, அப்பாவாக இளங்கோ குமரவேல் . வில்லனாக அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா என நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

கோவிந்த் வசந்தாவின் இசையும் ,தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .

கிரிக்கெட் விளையாட்டை மையமாக கதையுடன் இரு வெவ்வேறு சமூகத்தின் பகையுடன் சாதி மோதல், காதல், நட்பு என இயக்குனர் எஸ் ஜெயக்குமார்.

கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கதையுடன் திரைக்கதையில் இரு வெவ்வேறு சமூகத்தின் சாதி பாகுபாடு அரசியலுடன், இரு சமூகத்திற்கும் பொது பிரச்சனை என வரும் போது ஒற்றுமையாக ஒன்று சேர்ந்தால் மட்டுமே எந்த பிரச்சனையானாலும் எதிர்த்து வெற்றி பெற முடியும் என்கிற அழுத்தமான சமூக கருத்துடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.

ரேட்டிங் ; 3 . 5

Comentarios


bottom of page