அச்யுத் குமாருக்கும் சீதாவுக்கும் மகனான ஜெயம் ரவி வக்கீல் படிப்பை முடித்தும் வேலைக்கு செல்லாமல் ஏதாவது பிரச்சனைஇருப்பதை கண்டு அதில் அவர் உண்மையாக இருப்பதால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையே இவரது அக்கா பூமிகாசாவ்லா திருமணம் ஆகி வனத்துறை அதிகாரி கணவர் நட்டி , மாமனார் ராவ் ரமேஷ் , மாமியார் சரண்யா மற்றும் நட்டியின் தங்கை பிரியங்கா மோகனுடன் ஊட்டியில் பள்ளியில் வேலை செய்து கொண்டு கணவன், மாமியார் ,மாமனார், குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வாழ்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியால் வெளி பிரச்சனைகள் தினமும் அதிகமாக தொல்லை தாங்க முடியாத பெற்றோர், அவரை அக்கா பூமிகாசாவ்லா வாழும் இடமான ஊட்டிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அங்கேயும் இவரது பேச்சினால் பூமிகாசாவ்லா குடும்பத்தில் மிக பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த பிரச்சனையால் பூமிகாசாவ்லா குழந்தைகளுடன் நட்டியை விட்டுப் பிரிகிறார்.
இதனால் ஆத்திரமடையும் ஜெயம் ரவியின் பெற்றோர் அவர் மீது கடும் கோபத்தில் பூமிகாசாவ்லாவை குடும்பத்துடன் சேர்த்து வைக்காமல் எங்களை அப்பா அம்மா என அழைக்கக்கூடாது என சொல்லி விடுகிறார்கள்.
பூமிகாசாவ்லாவை குடும்பத்துடன் சேர்த்து வைக்க போராடும் ஜெயம் ரவி இறுதியில் அதில் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’பிரதர்’’
நாயகன் ஜெயம் ரவி மசாலாத்தனம் இல்லாத கதையில் இது வரை நடிக்காத கதாபாத்திரத்தில் நல்ல குணம் கொண்ட மனிதனாக எல்லோருக்கும் உதவுவது உண்மையையாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது தன்னால் ஏற்பட்ட பிரச்சனையினால் பூமிகா சாவ்லாவின் நிலை கண்டு பதறுவது, பெற்றோர் முன் பேச முடியாமல் நிலை குலைந்து நிற்பது , ராவ் ரமேஷிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்பது என உணர்ச்சிமயமாக அமைதியான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதைக்கேற்றபடி நடிக்கும் நாயகி பிரியங்கா மோகன் ,ஜெயம் ரவியின் அக்காவாக வரும் பூமிகா சாவ்லா, கணவராக வரும் நட்டி , அப்பாவாக நடிக்கும் அச்யுத் குமார் , அம்மாவாக நடிக்கும் சீதா, ஆணவம் கொண்ட மாமனாராக வரும் ராவ் ரமேஷ் , சரண்யா பொன்வண்ணன் , சில காட்சிகளில் மட்டும் சிரிப்பை வரவழைக்கும் வி டி வி கணேஷ் ,சதிஷ் கிருஷ்ணன் என நடித்தவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சிறப்பு
விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
முழுக்க முழுக்க குடும்பக் கதையை காமெடி படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர்.
அழுத்தம் இல்லாத திரைக்கதையினால் காட்சிகளில் தொய்வு இருந்தாலும் குடும்ப படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியளிக்கும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எம்.ராஜேஷ்.
ரேட்டிங் - 3 / 5
Comments