டிமாண்டி காலனி பட முதல் பாகத்தில் ஒரு வீட்டிற்குள் ஒன்றாக இருக்கும் இளைஞர்கள் கொல்லப் பட்டு முடிவில் அருள்நிதியும் கொல்ல படுவதுபோல் படத்தை முடித்திருப்பார்கள்.
இரண்டாம் பாகத்தில் நாயகன் அருள்நிதி மட்டும் உயிர் பிழைத்து மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பது போல கதை ஆரம்பிக்கிறது .
புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் பிரியா பவானி சங்கரின் கணவர். ,திடீர் என மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
சில மாதங்கள் கடந்த பின்பும் பிரியா பவானி சங்கர் தன் கணவரை மறக்க முடியாமல் தவித்து வருகிறார். ஏற்கனவே சேமித்து வைத்த கணவரின் விந்தணுவை பயன்படுத்தி ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட கணவரின் ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் ஏதோ சொல்ல வருவதாக உணர்கிறார்.
அதற்காக புத்த துறவிகள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.
மற்றொரு பக்கம் ஐதராபாத்தில் இருக்கும் இரட்டையர்களில் ஒருவரான அண்ணன் அருள்நிதியின் தந்தை மிக பெரிய கோடீஸ்வரர். இவர் இறக்கும் நேரத்தில் எழுதி வைக்கும் சொத்துக்களின் உயிலில் 70 சதவீதத்தை சென்னையில் இருக்கும் தம்பி அருள்நிதிக்கு உரிமை என எழுதி வைத்து விடுகிறார்.
அண்ணன் அருள்நிதி கோமா நிலையில் சிகிச்சை பெறும் தம்பி அருள்நிதியை கொன்றாவது சொத்துக்களை அடைய நினைக்கும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.
முதல் பாகத்தின் நாயகன் அருள்நிதி கதையில் இணைந்துவிடும் நேரத்தில் பிரியா பவானி சங்கர் இறந்த கணவர் நினைவாக சைனீஸ் உணவகம் ஒன்றை தொடங்குகிறார்.
ஒரு நாள் இரவில் இந்த உணவத்திற்கு வரும் அண்ணன் அருள்நிதி மற்றும் புத்த துறவி ,பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் அந்த உணவகத்தில் இருந்து அனுமாஷ்ய சக்தியின் ஆதிக்கத்தினால் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
முடிவில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் புத்த துறவி ஆகிய மூவரும் அனுமாஷ்ய சக்தியின் கோர தாண்டவ பிடியில் இருந்து உணவகத்தில் இருந்து உயிருடன் வெளியே வந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’டிமாண்டி காலனி 2 ’
இரட்டையர்கள் சீனிவாசன் , ரகு என அண்ணன் மற்றும் தம்பி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி கதையுடன் இணைந்து கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆண்டி ஜாஸ்கெலைனன்,டிசெரிங் டோர்ஜி,அருண் பாண்டியன், முத்துக்குமார்,மீனாட்சி கோவிந்தராஜன்
சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
சாம் சி எஸ் பின்னணி இசையும், ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
ஹாரர் திரில்லரான கதை களத்துடன் மிரட்டலான திரைக்கதை அமைப்புடன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் திகிலான அனுபவத்தை உணரும்படி ஹாலி வுட் தரத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
ரேட்டிங் - 3.5 / 5
Comments