'
தேவரா' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வுக்காக உங்களைப் போலவே நாங்களும் இந்த நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். ஏனெனில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். பல சவால்களை எதிர்கொண்டோம். இதை பெரிய அளவில் கொண்டாட விரும்பினோம். குறிப்பாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அன்புக்குரிய மாஸ் நாயகன் ஜூனியர் என்டிஆர்-ரின் படம் 'சோலோ ரிலீஸாக' வெளியாகிறது.
கணேஷ் நிமர்ஜனத்திற்கு மிக அருகில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை திட்டமிட்டோம். இது போன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு பொதுவாக குறைந்தது ஒரு வாரமாவது முன் தயாரிப்பு தேவைப்படும். மேலும், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையும் எங்களுக்கு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இன்று மழை பெய்யாவிட்டாலும் கூட நிகழ்வு நடக்க சாதகமான சூழல் இல்லை என்பதே உண்மை. மேலும், ரசிகர்களின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கனத்த மனதோடு இந்த நிகழ்வை ரத்து செய்யும் முடிவு எடுத்திருக்கிறோம்.
உங்களில் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணம் செய்து உங்கள் கதாநாயகனைப் பார்க்கவும் கொண்டாடவும் வந்திருப்பீர்கள். நீங்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்கள் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம்.
உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி.
டீம் தேவாரா
コメント